Day 36: Direction Sense Test – Daily Challenge

KARKANDU KANITHAM

Daily Challenge Free Practice
Home

Day 36: Logical Reasoning

Direction Sense Test (25 Questions)

Q1: A man walks 5 km toward South, turns left and walks 3 km, and then turns left and walks 5 km. Which direction is he facing now?
ஒருவர் தெற்கு நோக்கி 5 கி.மீ நடக்கிறார், பின் இடதுபுறம் திரும்பி 3 கி.மீ நடக்கிறார், மீண்டும் இடதுபுறம் திரும்பி 5 கி.மீ நடக்கிறார். இப்போது அவர் எந்த திசையை நோக்கி இருக்கிறார்?
A) West / மேற்கு
B) South / தெற்கு
C) North / வடக்கு
D) East / கிழக்கு
Q2: Ram went 10 m towards East, turned right and went 10 m. He then turned left and went 10 m. In which direction is he from his starting point?
ராம் கிழக்கு நோக்கி 10 மீ சென்று, வலதுபுறம் திரும்பி 10 மீ செல்கிறார். பின் இடதுபுறம் திரும்பி 10 மீ செல்கிறார். அவர் புறப்பட்ட இடத்திலிருந்து எந்தத் திசையில் உள்ளார்?
A) South / தெற்கு
B) South-East / தென்கிழக்கு
C) North-West / வடமேற்கு
D) East / கிழக்கு
Q3: A boy is facing North. He turns 180 degrees in the clockwise direction and then 90 degrees in the anti-clockwise direction. Which direction is he facing now?
ஒரு சிறுவன் வடக்கு நோக்கி நிற்கிறான். அவன் கடிகார திசையில் 180 டிகிரியும், பின்னர் கடிகார எதிர் திசையில் 90 டிகிரியும் திரும்புகிறான். இப்போது அவன் எந்த திசையை நோக்கி நிற்கிறான்?
A) West / மேற்கு
B) East / கிழக்கு
C) South / தெற்கு
D) South-West / தென்மேற்கு
Q4: One morning after sunrise, Vimal started to walk. His shadow fell exactly to his right. Which direction was he facing?
சூரிய உதயத்திற்குப் பிறகு விமல் நடக்கத் தொடங்குகிறான். அவனது நிழல் அவனது வலதுபுறமாக விழுகிறது எனில், அவன் எந்த திசையை நோக்கிச் செல்கிறான்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு
Q5: A is located to the West of B. C is located at South of B. In what direction is A with respect to C?
B-க்கு மேற்கே A அமைந்துள்ளது. B-க்கு தெற்கே C அமைந்துள்ளது. C-ஐப் பொறுத்து A எந்த திசையில் உள்ளது?
A) North-East / வடகிழக்கு
B) North-West / வடமேற்கு
C) South-East / தென்கிழக்கு
D) South-West / தென்மேற்கு
Q6: A man walks 3 km North, then turns East and walks 4 km. How far is he from the starting point?
ஒருவர் வடக்கு நோக்கி 3 கி.மீ நடந்து, பின்பு கிழக்கு நோக்கித் திரும்பி 4 கி.மீ நடக்கிறார். அவர் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்?
A) 5 km
B) 7 km
C) 6 km
D) 1 km
Q7: If South-East becomes North, North-East becomes West and so on. What will West become?
தென்கிழக்கு என்பது ‘வடக்கு’ எனவும், வடகிழக்கு என்பது ‘மேற்கு’ எனவும் மாறினால், ‘மேற்கு’ திசை என்னவாக மாறும்?
A) North-East / வடகிழக்கு
B) North-West / வடமேற்கு
C) South-East / தென்கிழக்கு
D) South-West / தென்மேற்கு
Q8: One evening before sunset, Rekha and Hema were talking to each other face to face. If Hema’s shadow was exactly to the right of Hema, which direction was Rekha facing?
சூரிய அஸ்தமனத்திற்கு முன் ரேகாவும் ஹேமாவும் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருந்தனர். ஹேமாவின் நிழல் அவளது வலதுபுறம் விழுந்தால், ரேகா எந்த திசையை நோக்கி நின்றாள்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு
Q9: Ravi traveled 4 km straight towards South. He turned left and traveled 6 km straight, then turned right and traveled 4 km straight. How far is he from the starting point?
ரவி தெற்கு நோக்கி 4 கி.மீ நேராகப் பயணம் செய்தார். அவர் இடதுபுறம் திரும்பி 6 கி.மீ நேராகச் சென்றார், பின்பு வலதுபுறம் திரும்பி 4 கி.மீ நேராகச் சென்றார். அவர் தொடக்கப் புள்ளியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளார்?
A) 8 km
B) 10 km
C) 12 km
D) 14 km
Q10: K is 40m South-West of L. M is 40m South-East of L. Then M is in which direction of K?
L-க்கு தென்மேற்கே 40 மீ தொலைவில் K உள்ளார். L-க்கு தென்கிழக்கே 40 மீ தொலைவில் M உள்ளார். K-ஐப் பொறுத்து M எந்த திசையில் உள்ளார்?
A) East / கிழக்கு
B) West / மேற்கு
C) North / வடக்கு
D) South / தெற்கு
Q11: At 4:30 PM, if the minute hand points towards East, in which direction does the hour hand point?
மாலை 4:30 மணிக்கு நிமிட முள் கிழக்கு திசையைக் காட்டினால், மணி முள் எந்த திசையைக் காட்டும்?
A) South-East / தென்கிழக்கு
B) South / தெற்கு
C) North-East / வடகிழக்கு
D) North / வடக்கு
Q12: From his house, Lokesh went 15 km to the North. Then he turned west and covered 10 km. Then he turned south and covered 5 km. Finally, turning to east, he covered 10 km. In which direction is he from his house?
லோகேஷ் தன் வீட்டிலிருந்து 15 கி.மீ வடக்கு நோக்கிச் சென்றார். பின்பு மேற்கு நோக்கி 10 கி.மீ-ம், தெற்கு நோக்கி 5 கி.மீ-ம், கடைசியாக கிழக்கு நோக்கி 10 கி.மீ-ம் கடந்தார். இப்போது தன் வீட்டிலிருந்து அவர் எந்தத் திசையில் உள்ளார்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு
Q13: I am facing South. I turn right and walk 20 m. Then I turn right again and walk 10 m. Then I turn left and walk 10 m and then turning right walk 20 m. Then I turn right again and walk 60 m. In which direction am I from the starting point?
நான் தெற்கு நோக்கி நிற்கிறேன். வலதுபுறம் திரும்பி 20 மீ நடக்கிறேன். மீண்டும் வலதுபுறம் 10 மீ, இடதுபுறம் 10 மீ, வலதுபுறம் 20 மீ, கடைசியாக வலதுபுறம் 60 மீ நடக்கிறேன். நான் புறப்பட்ட இடத்திலிருந்து எந்த திசையில் உள்ளேன்?
A) North-West / வடமேற்கு
B) North-East / வடகிழக்கு
C) South-East / தென்கிழக்கு
D) North / வடக்கு
Q14: A man is performing yoga with his head down and legs up. His face is towards the West. In which direction will his left hand be?
ஒருவர் தலைகீழாக நின்று (சிரசாசனம்) யோகா செய்கிறார். அவரது முகம் மேற்கு திசையை நோக்கி இருந்தால், அவரது இடது கை எந்த திசையைக் குறிக்கும்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு
Q15: A boy rides his bicycle Northwards, then turns left and rides 1 km and again turns left and rides 2 km. He found himself 1 km West of his starting point. How far did he ride Northwards initially?
ஒரு சிறுவன் சைக்கிளில் வடக்கு நோக்கிச் சென்று, பின்பு இடதுபுறம் திரும்பி 1 கி.மீ-ம், மீண்டும் இடதுபுறம் திரும்பி 2 கி.மீ-ம் செல்கிறான். இப்போது அவன் புறப்பட்ட இடத்திலிருந்து 1 கி.மீ மேற்கே உள்ளான் எனில், ஆரம்பத்தில் அவன் வடக்கு நோக்கிப் பயணித்த தூரம் என்ன?
A) 1 km
B) 2 km
C) 3 km
D) 5 km
Q16: Point P is 10m West of Point Q. Point R is 4m North of Point P. Point S is 5m South of Point Q. What is the direction of Point S with respect to Point R?
P என்பது Q-க்கு மேற்கே 10 மீ தொலைவிலும், R என்பது P-க்கு வடக்கே 4 மீ தொலைவிலும், S என்பது Q-க்கு தெற்கே 5 மீ தொலைவிலும் உள்ளது. R-ஐப் பொறுத்து S எந்த திசையில் உள்ளது?
A) South-West / தென்மேற்கு
B) South-East / தென்கிழக்கு
C) North-East / வடகிழக்கு
D) North-West / வடமேற்கு
Q17: A watch reads 9:00. If the minute hand points North-East, in what direction will the hour hand point?
ஒரு கடிகாரத்தில் நேரம் 9:00. நிமிட முள் வடகிழக்கு திசையைக் காட்டினால், மணி முள் எந்த திசையைக் காட்டும்?
A) South-West / தென்மேற்கு
B) North-West / வடமேற்கு
C) South-East / தென்கிழக்கு
D) North-East / வடகிழக்கு
Q18: I start from my home and go 2 km straight. Then, I turn towards my right and go 1 km. I turn again towards my right and go 1 km again. If I am North-West from my house, then in which direction did I go in the beginning?
நான் என் வீட்டிலிருந்து 2 கி.மீ நேராகச் சென்றேன். பின்பு வலதுபுறம் திரும்பி 1 கி.மீ-ம், மீண்டும் வலதுபுறம் திரும்பி 1 கி.மீ-ம் சென்றேன். இப்போது நான் என் வீட்டிலிருந்து வடமேற்கு திசையில் இருந்தால், ஆரம்பத்தில் நான் புறப்பட்ட திசை எது?
A) North / வடக்கு
B) West / மேற்கு
C) East / கிழக்கு
D) South / தெற்கு
Q19: Village Q is to the North of village P. Village R is in the East of Village Q. Village S is to the left of village P. In which direction is village S with respect to village R?
P கிராமத்திற்கு வடக்கே Q கிராமம் உள்ளது. Q கிராமத்திற்கு கிழக்கே R கிராமம் உள்ளது. P கிராமத்திற்கு இடதுபுறம் (மேற்கே) S கிராமம் உள்ளது. R-ஐப் பொறுத்து S கிராமம் எந்த திசையில் உள்ளது?
A) South-East / தென்கிழக்கு
B) North-West / வடமேற்கு
C) South-West / தென்மேற்கு
D) North-East / வடகிழக்கு
Q20: A man is facing North-West. He turns 90 degrees in the clockwise direction and then 135 degrees in the anticlockwise direction. Which direction is he facing now?
ஒருவர் வடமேற்கு திசையை நோக்கி நிற்கிறார். அவர் கடிகார திசையில் 90 டிகிரியும், பின்பு கடிகார எதிர் திசையில் 135 டிகிரியும் திரும்புகிறார். இப்போது அவர் எந்த திசையை நோக்கி நிற்கிறார்?
A) East / கிழக்கு
B) West / மேற்கு
C) North / வடக்கு
D) South / தெற்கு
Q21: You go North, turn right, then right again and then go to the left. In which direction are you now?
நீங்கள் வடக்கு நோக்கிச் சென்று, வலதுபுறம் திரும்பி, மீண்டும் வலதுபுறம் திரும்பி, பின்பு இடதுபுறம் செல்கிறீர்கள். இப்போது நீங்கள் எந்த திசையில் செல்கிறீர்கள்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு
Q22: A girl leaves from her home. She first walks 30 m in North-West direction and then 30 m in South-West direction. Next, she walks 30 m in South-East direction. Finally, she turns towards her house. In which direction is she moving?
ஒரு பெண் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு வடமேற்காக 30 மீ, தென்மேற்காக 30 மீ, தென்கிழக்காக 30 மீ நடக்கிறாள். கடைசியாக அவள் தன் வீட்டை நோக்கித் திரும்புகிறாள் எனில், அவள் எந்த திசையை நோக்கி நகர்கிறாள்?
A) North-East / வடகிழக்கு
B) North-West / வடமேற்கு
C) South-East / தென்கிழக்கு
D) South-West / தென்மேற்கு
Q23: A driver left his village and drove North for 20 kms, after which he stopped for breakfast. Then he turned left and drove another 30 kms, when he stopped for lunch. After some rest, he again turned left and drove 20 kms before stopping for evening tea. Once more he turned left and drove 30 kms. After evening tea in which direction did he drive?
ஒரு ஓட்டுநர் வடக்கே 20 கி.மீ சென்று காலை உணவுக்காக நிற்கிறார். பின் இடதுபுறம் திரும்பி 30 கி.மீ சென்று மதிய உணவுக்காக நிற்கிறார். பின் இடதுபுறம் திரும்பி 20 கி.மீ சென்று தேநீருக்காக நிற்கிறார். கடைசியாக இடதுபுறம் திரும்பி 30 கி.மீ செல்கிறார். தேநீருக்குப் பிறகு அவர் எந்த திசையில் பயணித்தார்?
A) West / மேற்கு
B) East / கிழக்கு
C) North / வடக்கு
D) South / தெற்கு
Q24: Two cars start from the opposite places of a main road, 150 km apart. First car runs for 25 km and takes a right turn and then runs 15 km. It then turns left and then runs for another 25 km and then takes the direction back to reach the main road. In the mean time, due to minor break down the other car has run only 35 km along the main road. What would be the distance between two cars at this point?
150 கி.மீ நீளமுள்ள சாலையின் இரு முனைகளிலிருந்து இரு கார்கள் புறப்படுகின்றன. முதல் கார் 25 கி.மீ சென்று வலதுபுறம் திரும்பி 15 கி.மீ செல்கிறது. பின் இடதுபுறம் திரும்பி 25 கி.மீ சென்று, மீண்டும் பிரதான சாலையை வந்தடைகிறது. அதே நேரத்தில் இரண்டாவது கார் பிரதான சாலையில் 35 கி.மீ மட்டுமே பயணித்துள்ளது. இப்போது இரு கார்களுக்கும் இடையேயான தூரம் என்ன?
A) 65 km
B) 75 km
C) 80 km
D) 85 km
Q25: A clock is so placed that at 12 noon its minute hand points towards North-East. In which direction does its hour hand point at 1:30 PM?
மதியம் 12 மணிக்கு ஒரு கடிகாரத்தின் நிமிட முள் வடகிழக்கு திசையைக் காட்டுகிறது. எனில், மதியம் 1:30 மணிக்கு அதன் மணி முள் எந்த திசையைக் காட்டும்?
A) North / வடக்கு
B) South / தெற்கு
C) East / கிழக்கு
D) West / மேற்கு

Leave a Comment