KARKANDU KANITHAM

Online Practice Test
Home
Daily 25 Challenge

Simple Interest (தனி வட்டி)
25 Practice Models

TNPSC Group 1 & 2 • Complete Practice Test

தேர்வு எழுதும் முறை (Instructions):

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள 25 கேள்விகளையும் உங்கள் நோட்டில் (Notebook) சால்வ் செய்து A, B, C, D-ல் சரியான விடையைக் குறித்துக்கொள்ளுங்கள்.
2. இன்று மாலை இதே பக்கத்தில் இதற்கான Answer Key (சரியான விடைகள்) வெளியிடப்படும்.
3. மாலை ஆன்சர் கீ வந்ததும் உங்கள் மதிப்பெண்களைச் சரிபார்த்துவிட்டு, நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் உங்கள் மதிப்பெண்ணைப் பதிவிடுங்கள்!

Answer Key & Solutions (மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்)

மாணவர்கள் தங்களின் விடையைக் குறித்துக்கொள்ளுங்கள். மாலை சரியான விடைகள் இங்கு அப்டேட் செய்யப்படும்.

Question 01
Find the simple interest on Rs. 7300 at 5% p.a. for 73 days. ரூ. 7300-க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 73 நாட்களுக்கான தனி வட்டியைக் காண்க.
A Rs. 50
B Rs. 73
C Rs. 100
D Rs. 365
Question 02
The simple interest on a sum of money is 4/25 of the principal. If the number of years is numerically equal to the rate percent per annum, then the rate percent is: ஒரு தொகையின் தனிவட்டியானது அதன் அசலின் 4/25 மடங்காகும். வட்டி வீதமும், ஆண்டுகளின் எண்ணிக்கையும் சமம் எனில், வட்டி வீதம் என்ன?
A 2%
B 3%
C 4%
D 5%
Question 03
A sum of money amounts to Rs. 2800 in 2 years and to Rs. 3250 in 5 years at simple interest. Find the sum. ஒரு குறிப்பிட்ட தொகையானது தனி வட்டியில் 2 ஆண்டுகளில் ரூ.2800 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.3250 ஆகவும் மாறுகிறது எனில், அந்த அசல் தொகை என்ன?
A Rs. 2500
B Rs. 2400
C Rs. 2600
D Rs. 2200
Question 04
A sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at a 2% higher rate, it would have fetched Rs. 360 more. Find the sum. ஒரு தொகையானது 3 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தனி வட்டி வீதத்தில் முதலீடு செய்யப்படுகிறது. வட்டி வீதம் 2% அதிகமாக இருந்திருந்தால் ரூ.360 கூடுதல் வட்டியாக கிடைத்திருக்கும் எனில், அசல் எவ்வளவு?
A Rs. 4000
B Rs. 5000
C Rs. 5500
D Rs. 6000
Question 05
A sum of money doubles itself in 10 years at simple interest. What is the rate of interest? ஒரு தொகையானது தனிவட்டியில் 10 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில், வட்டி வீதம் என்ன?
A 8%
B 10%
C 12%
D 15%
Question 06
A sum of money becomes 3 times in 12 years at simple interest. In how many years will it become 5 times at the same rate of SI? ஒரு தொகை தனி வட்டியில் 12 ஆண்டுகளில் 3 மடங்காகிறது. அதே வட்டி வீதத்தில் அத்தொகை 5 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
A 20 years
B 18 years
C 24 years
D 30 years
Question 07
Rs. 10,000 is lent in two parts, one at 8% p.a. and the other at 10% p.a. If the average yearly interest is 9.2%, the two parts are: ரூ.10,000 இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒன்று 8% வட்டிக்கும், மற்றொன்று 10% வட்டிக்கும் கடனாக வழங்கப்படுகிறது. ஓராண்டின் சராசரி வட்டி 9.2% எனில், அந்த இரண்டு பகுதிகள் யாவை?
A Rs. 4000, Rs. 6000
B Rs. 5000, Rs. 5000
C Rs. 6000, Rs. 4000
D Rs. 4500, Rs. 5500
Question 08
A man invests 1/3 of his capital at 7%, 1/4 at 8% and the remainder at 10%. If his annual income from simple interest is Rs. 561, his capital is: ஒருவர் தனது முதலீட்டில் 1/3 பங்கை 7% வட்டிக்கும், 1/4 பங்கை 8% வட்டிக்கும், மீதமுள்ள பங்கை 10% வட்டிக்கும் முதலீடு செய்கிறார். அவரின் ஆண்டு வட்டி வருமானம் ரூ.561 எனில், மொத்த முதலீடு எவ்வளவு?
A Rs. 5400
B Rs. 6000
C Rs. 6600
D Rs. 7200
Question 09
The rate of SI for the first 2 years is 4%, for the next 4 years is 6%, and for the period beyond 6 years is 8%. If the interest earned by a sum in 9 years is Rs. 1120, the sum is: முதல் 2 ஆண்டுகளுக்கு 4%, அடுத்த 4 ஆண்டுகளுக்கு 6%, 6 ஆண்டுகளுக்குப் பிறகு 8% என தனி வட்டி கணக்கிடப்படுகிறது. ஒரு தொகைக்கு 9 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த வட்டி ரூ.1120 எனில், அசல் என்ன?
A Rs. 1500
B Rs. 2000
C Rs. 2500
D Rs. 3000
Question 10
The SI on a certain sum for 4 years at 8% p.a. is Rs. 120 less than the SI on the same sum for 5 years at 7% p.a. Find the sum. ஒரு தொகையின் மீது 8% வட்டி வீதத்தில் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டியானது, அதே தொகைக்கு 7% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டியை விட ரூ.120 குறைவு எனில், அசல் எவ்வளவு?
A Rs. 3500
B Rs. 4000
C Rs. 4500
D Rs. 5000
Question 11
Rs. 4000 is divided into two parts such that SI on the first part for 3 years at 8% is equal to the SI on the second part for 4 years at 4%. Find the two parts. ரூ.4000 இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. முதல் பகுதியின் மீது 8% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டியும், இரண்டாம் பகுதியின் மீது 4% வட்டியில் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டியும் சமம் எனில், அந்த இரு பகுதிகள் யாவை?
A 2000, 2000
B 2500, 1500
C 1200, 2800
D 1600, 2400
Question 12
Rs. 3600 is divided into two parts such that if one part is lent at 9% p.a. and the other at 10% p.a., the total annual income is Rs. 333. Find the amount lent at 9%. ரூ.3600 இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 9% மற்றும் 10% வட்டிக்கு கடனாக வழங்கப்படுகிறது. ஓராண்டின் மொத்த வட்டி வருமானம் ரூ.333 எனில், 9% வட்டிக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?
A Rs. 2700
B Rs. 2500
C Rs. 2000
D Rs. 900
Question 13
What sum of money will produce Rs. 2 per day as simple interest at the rate of 5% p.a.? 5% ஆண்டு வட்டி வீதத்தில், நாளொன்றுக்கு ரூ.2 தனி வட்டியாக கிடைக்க வேண்டும் எனில், எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும்?
A Rs. 10000
B Rs. 14600
C Rs. 12500
D Rs. 15000
Question 14
A sum of Rs. 3200 is lent on 4th April 2012 at 5% p.a. What will be the amount on 16th June 2012? ரூ.3200-ஐ 4 ஏப்ரல் 2012 அன்று 5% தனிவட்டிக்கு கடனாக அளித்தால், 16 ஜூன் 2012 அன்று கிடைக்கும் மொத்தத் தொகை எவ்வளவு?
A Rs. 3225
B Rs. 3250
C Rs. 3232
D Rs. 3300
Question 15
A lent Rs. 5000 to B for 2 years and Rs. 3000 to C for 4 years on simple interest at the same rate and received Rs. 2200 in all from both as interest. The rate of interest is: A என்பவர் B-க்கு ரூ.5000-ஐ 2 ஆண்டுகளுக்கும், C-க்கு ரூ.3000-ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனிவட்டி வீதத்தில் கடனாக அளித்தார். இருவரிடமிருந்தும் மொத்தமாக ரூ.2200 வட்டியாக பெற்றார் எனில், வட்டி வீதம் என்ன?
A 8%
B 10%
C 12%
D 15%
Question 16
The annual income of a person decreases by Rs. 64 when the annual rate of interest falls from 10% to 8%. His capital is: ஆண்டு வட்டி வீதம் 10%-லிருந்து 8% ஆக குறையும்போது, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.64 குறைகிறது எனில், அவரது அசல் என்ன?
A Rs. 2400
B Rs. 2800
C Rs. 3200
D Rs. 3600
Question 17
What annual installment will discharge a debt of Rs. 1092 due in 3 years at 12% simple interest? 12% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ரூ.1092 என்ற கடனை அடைக்க, ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய சம தவணை (Installment) தொகை என்ன?
A Rs. 325
B Rs. 350
C Rs. 300
D Rs. 364
Question 18
The SI on a certain sum of money for 3 years at 8% p.a. is half the compound interest on Rs. 4000 for 2 years at 10% p.a. Find the sum placed on SI. ரூ.4000-க்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியில் பாதி அளவே, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டியாக கிடைக்கிறது. தனிவட்டியில் முதலீடு செய்யப்பட்ட அந்தத் தொகை என்ன?
A Rs. 1500
B Rs. 1650
C Rs. 1750
D Rs. 2000
Question 19
At what rate percent per annum will the simple interest on a sum of money be 2/5 of the amount in 10 years? ஒரு தொகையின் தனிவட்டியானது 10 ஆண்டுகளில் அதன் மொத்தத் தொகையில் (Amount) 2/5 மடங்காக மாறுகிறது எனில், வட்டி வீதம் என்ன?
A 5%
B 6 2/3%
C 7 1/2%
D 8%
Question 20
If the simple interest on Rs. x is Rs. y and the simple interest on Rs. y is Rs. z, both for the same time and same rate, then the relation between x, y, and z is: ஒரே கால அளவு மற்றும் ஒரே வட்டி வீதத்தில், ரூ.x-ன் தனிவட்டி ரூ.y ஆகவும், ரூ.y-ன் தனிவட்டி ரூ.z ஆகவும் இருந்தால், x, y, z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்ன?
A y² = xz
B x² = yz
C z² = xy
D xyz = 1
Question 21
A sum of money amounts to Rs. 9800 after 5 years and Rs. 12005 after 8 years at the same rate of SI. The rate of interest is: ஒரு தொகை தனி வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.9800 ஆகவும், 8 ஆண்டுகளில் ரூ.12005 ஆகவும் மாறுகிறது எனில், வட்டி வீதம் என்ன?
A 8%
B 10%
C 12%
D 15%
Question 22
A certain sum of money amounts to Rs. 1008 in 2 years and to Rs. 1164 in 3.5 years. Find the sum and rate of interest. ஒரு தொகை 2 ஆண்டுகளில் ரூ.1008 ஆகவும், 3.5 ஆண்டுகளில் ரூ.1164 ஆகவும் மாறுகிறது எனில், அசல் மற்றும் வட்டி வீதம் என்ன?
A Rs. 900, 10%
B Rs. 750, 12%
C Rs. 850, 15%
D Rs. 800, 13%
Question 23
A man borrows Rs. 8000 at 10% p.a. SI. He repays Rs. 2000 at the end of the first year. How much should he pay at the end of the 2nd year to clear the debt? ஒருவர் 10% தனிவட்டியில் ரூ.8000 கடனாகப் பெறுகிறார். முதல் ஆண்டின் முடிவில் ரூ.2000 திருப்பிச் செலுத்துகிறார். அவர் கடனை முழுமையாக அடைக்க இரண்டாம் ஆண்டின் முடிவில் எவ்வளவு செலுத்த வேண்டும்?
A Rs. 7480
B Rs. 7200
C Rs. 7600
D Rs. 7800
Question 24
In how much time will the simple interest on a certain sum become 0.125 times the principal at 10% p.a.? 10% ஆண்டு வட்டி வீதத்தில், ஒரு தொகையின் தனிவட்டியானது அந்த அசலின் 0.125 மடங்காக மாற எவ்வளவு காலம் ஆகும்?
A 1 year
B 15 months
C 18 months
D 2 years
Question 25
Two equal sums were lent out at 7% and 5% SI respectively. The interest earned on the two loans adds up to Rs. 960 for 4 years. Find the total sum lent out. இரண்டு சமமான தொகைகள் முறையே 7% மற்றும் 5% தனிவட்டிக்கு கடனாக வழங்கப்பட்டன. 4 ஆண்டுகளில் அந்த இரு கடன்களுக்கும் சேர்த்து ரூ.960 வட்டியாக கிடைத்தால், கடனாக வழங்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?
A Rs. 2000
B Rs. 3000
C Rs. 4000
D Rs. 5000

வாட்ஸ்அப் குரூப் அறிவிப்பு

மாணவர்கள் அனைவரும் கேள்விகளை நோட்டில் செய்துவிட்டு, மாலை ஆன்சர் கீ வந்தவுடன் உங்கள் மதிப்பெண்களைச் சரிபாருங்கள்.
பின்னர் நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணைப் (Marks) பதிவு செய்யுங்கள்!

Leave a Comment