தேர்வு எழுதும் முறை (Instructions):
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள 25 கேள்விகளையும் உங்கள் நோட்டில் (Notebook) சால்வ் செய்து A, B, C, D-ல் சரியான விடையைக் குறித்துக்கொள்ளுங்கள்.
2. இன்று மாலை இதே பக்கத்தில் இதற்கான Answer Key (சரியான விடைகள்) வெளியிடப்படும்.
3. மாலை ஆன்சர் கீ வந்ததும் உங்கள் மதிப்பெண்களைச் சரிபார்த்துவிட்டு, நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் உங்கள் மதிப்பெண்ணைப் பதிவிடுங்கள்!
Answer Key & Solutions (மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்)
மாணவர்கள் தங்களின் விடையைக் குறித்துக்கொள்ளுங்கள். மாலை சரியான விடைகள் இங்கு அப்டேட் செய்யப்படும்.
Question 01
A person’s salary is first increased by 20% and then decreased by 20%. What is the net percentage change in his salary?
ஒருவரின் சம்பளம் முதலில் 20% அதிகரிக்கப்பட்டு, பின் 20% குறைக்கப்படுகிறது. அவரின் சம்பளத்தில் ஏற்படும் நிகர சதவீத மாற்றம் என்ன?
A 4% Increase (அதிகரிப்பு)
B 4% Decrease (குறைவு)
C No change (மாற்றமில்லை)
D 8% Decrease (குறைவு)
Question 02
The price of sugar is increased by 25%. By what percentage should a family reduce the consumption of sugar so that the expenditure on sugar remains the same?
சர்க்கரையின் விலை 25% அதிகரிக்கிறது. சர்க்கரைக்கான செலவு மாறாமல் இருக்க, ஒரு குடும்பம் அதன் பயன்பாட்டை எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
A 20%
B 25%
C 16.66%
D 15%
Question 03
In an examination, 60% of the students passed in Mathematics, 70% passed in English, and 20% failed in both the subjects. What percentage of students passed in both the subjects?
ஒரு தேர்வில், 60% மாணவர்கள் கணிதத்திலும், 70% பேர் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றனர். 20% மாணவர்கள் இரண்டிலும் தோல்வியடைந்தனர் எனில், இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை சதவீதம்?
Question 04
In an election between two candidates, 8% of the voters did not cast their votes. The winning candidate secured 48% of the total voters in the voter list and won by 1100 votes. Find the total number of voters in the list.
இரு வேட்பாளர்களுக்கு இடையேயான தேர்தலில், 8% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர், மொத்த வாக்காளர்களில் 48% வாக்குகளைப் பெற்று 1100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை?
A 25000
B 27500
C 30000
D 22500
Question 05
A mixture of 40 litres of milk and water contains 10% water. How much water must be added to this mixture to make the water 20% in the new mixture?
40 லிட்டர் பால் மற்றும் நீர் கலவையில் 10% நீர் உள்ளது. புதிய கலவையில் நீரின் அளவு 20% ஆக மாற, அதனுடன் எவ்வளவு நீர் சேர்க்க வேண்டும்?
A 5 litres
B 4 litres
C 6.5 litres
D 7.5 litres
Question 06
A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation?
ஒரு மாணவன் ஒரு எண்ணை 5/3 ஆல் பெருக்குவதற்குப் பதிலாக 3/5 ஆல் பெருக்கினார். அந்த கணக்கீட்டில் ஏற்பட்ட சதவீத பிழை என்ன?
Question 07
A man spends 75% of his income. His income is increased by 20% and his expenditure is increased by 10%. Find the percentage increase in his savings.
ஒரு மனிதன் தன் வருமானத்தில் 75%-ஐ செலவு செய்கிறான். அவனது வருமானம் 20% அதிகரிக்கிறது மற்றும் அவனது செலவு 10% அதிகரிக்கிறது. அவனது சேமிப்பில் ஏற்படும் சதவீத அதிகரிப்பு என்ன?
A 10%
B 25%
C 37.5%
D 50%
Question 08
If the numerator of a fraction is increased by 200% and the denominator is increased by 350%, the resultant fraction is 5/12. What was the original fraction?
ஒரு பின்னத்தின் தொகுதி 200% மற்றும் பகுதி 350% அதிகரிக்கப்பட்டால், கிடைக்கும் புதிய பின்னம் 5/12. அசல் பின்னம் என்ன?
A 5/8
B 5/9
C 7/12
D 11/12
Question 09
If A’s salary is 25% less than B’s salary, then B’s salary is how much percentage more than A’s salary?
A-யின் சம்பளம் B-யின் சம்பளத்தை விட 25% குறைவு எனில், B-யின் சம்பளம் A-யை விட எத்தனை சதவீதம் அதிகம்?
A 25%
B 33.33%
C 50%
D 20%
Question 10
Fresh fruit contains 68% water and dry fruit contains 20% water. How much dry fruit can be obtained from 100 kg of fresh fruits?
புதிய பழத்தில் 68% நீரும், காய்ந்த பழத்தில் (dry fruit) 20% நீரும் உள்ளது. 100 கிலோ புதிய பழங்களில் இருந்து எவ்வளவு காய்ந்த பழங்களைப் பெற முடியும்?
A 32 kg
B 40 kg
C 52 kg
D 80 kg
Question 11
A candidate scores 30% marks in an exam and fails by 50 marks, while another candidate scores 45% marks and gets 25 marks more than the minimum pass marks. Find the total marks of the exam.
ஒரு தேர்வில் ஒரு மாணவர் 30% மதிப்பெண்கள் பெற்று 50 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார். மற்றொரு மாணவர் 45% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி மதிப்பெண்ணை விட 25 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். தேர்வின் மொத்த மதிப்பெண்கள் என்ன?
Question 12
The population of a town was 8000. In one year, the male population increased by 6% and the female population increased by 10%, making the total population 8600. The number of females in the town initially was:
ஒரு நகரத்தின் மக்கள் தொகை 8000. ஒரு வருடத்தில், ஆண்களின் எண்ணிக்கை 6% மற்றும் பெண்களின் எண்ணிக்கை 10% அதிகரித்ததால், மக்கள் தொகை 8600 ஆக மாறியது. ஆரம்பத்தில் அந்த நகரத்தில் இருந்த பெண்களின் எண்ணிக்கை என்ன?
A 2000
B 3000
C 4000
D 5000
Question 13
The tax on a commodity is diminished by 20% and its consumption is increased by 15%. What is the net effect on the revenue?
ஒரு பொருளின் மீதான வரி 20% குறைக்கப்படுகிறது மற்றும் அதன் பயன்பாடு 15% அதிகரிக்கிறது. வருவாயில் ஏற்படும் நிகர விளைவு என்ன?
A 8% Decrease (குறைவு)
B 8% Increase (அதிகரிப்பு)
C 5% Decrease (குறைவு)
D 5% Increase (அதிகரிப்பு)
Question 14
The difference between 4/5 of a number and 45% of the same number is 56. What is 65% of that number?
ஒரு எண்ணின் 4/5 பங்கிற்கும், அதே எண்ணின் 45 சதவீதத்திற்கும் உள்ள வித்தியாசம் 56. அந்த எண்ணின் 65% என்ன?
Question 15
In an election, 10% of voters did not vote and 10% of the polled votes were declared invalid. The winning candidate got 54% of the valid votes and won by a majority of 1620 votes. Find the total number of voters.
ஒரு தேர்தலில் 10% பேர் வாக்களிக்கவில்லை மற்றும் பதிவான வாக்குகளில் 10% செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர் செல்லுபடியாகும் வாக்குகளில் 54% பெற்று 1620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்காளர்களைக் காண்க.
A 22000
B 25000
C 27500
D 30000
Question 16
If the radius of a circle is increased by 50%, its area will be increased by:
ஒரு வட்டத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் பரப்பளவு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்?
A 50%
B 100%
C 125%
D 225%
Question 17
In a class, the ratio of boys to girls is 3:2. If 20% of the boys and 25% of the girls are scholarship holders, the percentage of students who do not get a scholarship is:
ஒரு வகுப்பில் சிறுவர், சிறுமியர் விகிதம் 3:2. சிறுவர்களில் 20% மற்றும் சிறுமியர்களில் 25% பேர் உதவித்தொகை பெறுபவர்கள் எனில், உதவித்தொகை பெறாத மாணவர்களின் சதவீதம் என்ன?
Question 18
If x% of y is 100 and y% of z is 200, then find the relationship between x and z.
y-ன் x% என்பது 100 மற்றும் z-ன் y% என்பது 200 எனில், x மற்றும் z இடையேயான தொடர்பு என்ன?
A z = x
B z = 2x
C x = 2z
D z = 4x
Question 19
12 litres of a salt solution contains 7% salt. 4 litres of water is evaporated by boiling. What is the percentage of salt in the remaining solution?
7% உப்பு கொண்ட 12 லிட்டர் உப்பு கரைசலிலிருந்து 4 லிட்டர் நீர் காய்ச்சி ஆவியாக்கப்படுகிறது. மீதமுள்ள கரைசலில் உள்ள உப்பின் சதவீதம் என்ன?
A 10.5%
B 11%
C 12%
D 14%
Question 20
A person’s income tax rate is increased from 10% to 12%. However, the amount of tax he pays remains the same because his income decreased by Rs. 12,000. Find his initial income.
ஒருவரின் வருமான வரி விகிதம் 10%-லிருந்து 12% ஆக அதிகரிக்கிறது. ஆனால் அவரது வருமானம் ரூ.12,000 குறைந்ததால் அவர் செலுத்தும் வரித் தொகை மாறவில்லை. அவரின் ஆரம்ப வருமானத்தைக் காண்க.
A Rs. 60,000
B Rs. 72,000
C Rs. 84,000
D Rs. 96,000
Question 21
The value of a machine depreciates at 10% per annum. If its present value is Rs. 81,000, what was its value 2 years ago?
ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஆண்டுக்கு 10% குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பு ரூ. 81,000 எனில், 2 ஆண்டுகளுக்கு முன்பு அதன் மதிப்பு என்னவாக இருந்தது?
A Rs. 1,00,000
B Rs. 90,000
C Rs. 99,000
D Rs. 1,20,000
Question 22
A number when increased by 137.5% becomes 38. Find the original number.
ஒரு எண்ணை 137.5% அதிகரிக்கும் போது அது 38 ஆக மாறுகிறது. அந்த அசல் எண் என்ன?
Question 23
The price of an entry ticket to a fair was decreased by 20%, as a result of which the sale of tickets increased by 50%. What was the overall effect on the revenue?
ஒரு கண்காட்சியின் நுழைவுச்சீட்டு விலை 20% குறைக்கப்பட்டதால், சீட்டுகளின் விற்பனை 50% அதிகரித்தது. மொத்த வருவாயில் ஏற்பட்ட விளைவு என்ன?
A 20% Increase (அதிகரிப்பு)
B 25% Increase (அதிகரிப்பு)
C 20% Decrease (குறைவு)
D 30% Increase (அதிகரிப்பு)
Question 24
P is 20% more than Q and Q is 30% less than R. If P = 420, find the value of R.
P என்பது Q-வை விட 20% அதிகம் மற்றும் Q என்பது R-ஐ விட 30% குறைவு. P = 420 எனில், R-ன் மதிப்பு என்ன?
Question 25
A vessel has 60 litres of a solution of acid and water having 80% acid. How much water must be added to make it a solution in which acid forms 60%?
ஒரு பாத்திரத்தில் 80% அமிலம் உள்ள 60 லிட்டர் அமிலம் மற்றும் நீரின் கலவை உள்ளது. அதில் அமிலத்தின் அளவு 60% ஆக மாற எவ்வளவு நீர் சேர்க்க வேண்டும்?
A 15 litres
B 20 litres
C 25 litres
D 30 litres
வாட்ஸ்அப் குரூப் அறிவிப்பு
மாணவர்கள் அனைவரும் கேள்விகளை நோட்டில் செய்துவிட்டு, மாலை ஆன்சர் கீ வந்தவுடன் உங்கள் மதிப்பெண்களைச் சரிபாருங்கள்.
பின்னர் நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணைப் (Marks) பதிவு செய்யுங்கள்!